Pages

Sunday, May 22, 2011

எங்க தாத்தா இருக்கீங்க?!?! :(


என் வழியாக, நீங்க பெத்த , என்ன பெத்தவங்கள பாத்திங்க...
தமிழ்ல சோழ கத சொல்லி தந்திங்க...
நொருங்கி பிணஞ்சு சாப்ட சொன்னீங்க..
மனசார வாழ்த்திவிட்டு, துநீரும் குங்குமம் பூசி விட்டிங்க..
குழந்த மாதிரி போக்கவாயோடு சிரிச்சிங்க..
நல்லவரா இருந்து, நல்லவனா இருன்னு சொன்னீங்க..
விடுமுறையில், உங்கள் விரல் பிடித்து, ஊர் சுற்ற மனச ஏங்க வச்சிங்க..
வாழ்வின், முதல் மரணம் காமிசிங்க..

எங்க தாத்தா இருக்கீங்க?!?! :(

Thursday, May 12, 2011

என்று தணியும் இந்த சொந்த ஊர் தாகம்..

என்று தணியும் இந்த சொந்த ஊர் தாகம்..

கோத்த மல்லி வாங்க,
எட்டு அடி வைத்து நடக்கும் முன்,
பத்து புன்னகை வந்து விழும் சொந்த ஊர்..
...
பதறும் சிக்னலில்,
பட்டு அடி வாங்கி தெருவில் விழுந்தாழும்,
பத்து நொடி திரும்பி பார்க்க நேரமில்லை பிழைக்க வந்த ஊரில்..

- உங்கள் தோழன்..

அனைத்தும் தொலைத்தேன்

வெள்ளை வெயில்,
புழுதி காற்று,
மஞ்சளும் குங்குமமும்,
கலந்த கோவில் வாசனை..
தெருவுக்கு ஒரு புன்னகை..
...குசலம் விசாரிக்க பந்தங்கள்..
எடை கணிக்க சொந்தங்கள்..
கடந்த காலம் கடத்தி வரும் நட்புகள்..
ரசித்து கொண்டே பார்க்கும் அம்மா..
பார்த்து கொண்டே ரசிக்கும் அம்மா..

அனைத்தும் தொலைத்தேன்..
கத்தை கத்தையாய் சம்பாதித்த ருபாய் தாளில்..
பல ஆயிரம் மைல் தொலைவில்...

-உங்கள் தோழன்..

குறுவெண்பா..

முதல் குறுவெண்பா முயற்சி..

"வெகு தூரம் உள்ள இமயமும் கண்ணுக்கு தெரியவில்லை..
வெகு அருகில் உள்ள இமையும் கண்ணுக்கு தெரியவில்லை..
கண் பொய்த்தாலும், மனம் நினைத்தால் எதுவும் கிட்டும்..
...கண் மூடி யோசித்தால் இமையம் கூட என் விரல் தட்டும்..
இருந்தும், இந்த பொல்லாத மனதிற்கு காதலை மட்டும் மறக்க தெரியவில்லை...!!!